கோலகுபுபாருவில் அனைத்துலக ஓவியப் பெருவிழா!

Home / கோலகுபுபாருவில் அனைத்துலக ஓவியப் பெருவிழா!

img-20161130-wa0005

img-20161130-wa0006img-20161130-wa0008

 

வரலாற்று பதிவுகள் பொதிந்து கிடக்கும் கோலகுபுபாருவை உலகிற்கு அடையாளம் காட்டும் வகையிலும் உள்ளூர் மக்களின் திறமையை உலக அரங்கிற்கு எடுத்துக் கூறும் நோக்கத்தில் கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீ கீ ஹியோங்கின் சேவை மையம் ஏற்பாட்டிலும் உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றம், உலுசிலாங்கூர் மற்றும் கோலகுபுபாரு அரசு, அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்புடனும் மாபெரும் ஓவியப் பெருவிழா நடைப்பெறவுள்ளது. டிசம்பர் 1ஆம் நாள் தொடங்கி டிசம்பர் 10ஆம் திகதி வரையில் கோலகுபுபாரு சைட் மசோர் நூலகத்தில்  நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு ஓவியப் பெருவிழாவுக்கு 14 நாடுகளில் இருந்து 30 ஓவியக் கலைஞர்கள் ( இதில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று கலைஞர்களும் அடங்குவர்) கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். இங்குள்ள நிலவரங்களை ஓவியங்களாக பதிவு செய்யவதன் வாயிலாக புறநகர்ப்பகுதியாக இருந்த கோலகுபுபாரு உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற இடமாக மாற்றம் காண்பதுடன் கணிசமான சுற்றுப் பயணிகளையும் கவர்ந்திழுக்க உள்ளது. எனவே, அனைவரும் திரண்டு வாருங்கள்! ஓவியக்கலையின் மகத்துவத்தையும் கண்டு மகிழுங்கள். டிசம்பர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலகுபுபாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்து ஓவியக் கலைஞர்களுடன் ஒரு மாலைப் பொழுது நிகழ்வு இங்குள்ள இந்தியப் பெருமக்களுடன் நிகழவுள்ளது.